Type Here to Get Search Results !

தர்மபுரியில் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2025-26 மாணவர் சேர்க்கை தொடக்கம்.


தருமபுரி, ஜூன் 16-

தர்மபுரி மாவட்டம் பைசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் (பொ) முனைவர் மா.செல்வபாண்டியன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் உள்ள 08 முதுநிலை பாடபிரிவுகளுக்கான 2025-2026 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.


அரசுப் பல்கலைக்கழகமாகத் திகழும் பெரியார் பல்கலைக்கழகம் தர்மபுரி மாணவர்களுக்காக மாவட்டத்தில் செயல்படவுள்ள ஒரே உயர் கல்வி மையமாக திகழ்கிறது. இதில் M.B.A., M.Com., M.A. (ஆங்கிலம்), M.Sc. (கணிதவியல், இயற்பியல், கணினி அறிவியல், உயிர்தொழில்நுட்பவியல் மற்றும் புவியமைப்பியல்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.


ஈடுபாடும் தகுதியும் உள்ள இளநிலை பட்டம் பெற்ற மாணவர்கள், www.periyaruniversity.ac.in என்ற இணையதளத்தில் “PG & Research Studies Centre, Dharmapuri Admission 2025-26” பகுதி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்கு 04342-266399 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மைய இயக்குநர் (பொ) முனைவர் மா.செல்வபாண்டியன் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies