Type Here to Get Search Results !

தருமபுரியில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்: 75 மனுக்களுக்கு உடனடி தீர்வு, மேலும் 29 புதிய மனுக்கள் பெறப்பட்டது.



தருமபுரி, ஜூன் 11-

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் குறை தீர்க்கும் முகாம் (பெட்டிஷன் மேளா) இன்று (11.06.2025) காலை 10.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை, நடைபெற்றது. இந்த முகாம், தருமபுரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு) திரு. K. ஸ்ரீதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.


முகாமில் காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் அளித்த மொத்தம் 75 மனுக்கள் மீதான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்துக்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும், இன்றைய தினத்தில் மட்டும் புதிதாக 29 மனுக்கள் பெறப்பட்டன.


இந்த பெடிஷன் மேளா, பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக காவல் அதிகாரிகளிடம் தெரிவித்து, விரைவில் தீர்வை பெறக்கூடிய ஒரு பயனுள்ள தளமாக செயல்பட்டது. மக்கள் நலனில் காவல் துறை தொடர்ந்தும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்ளும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies