Type Here to Get Search Results !

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 491 மனுக்கள் பெறப்பட்டது.


தருமபுரி, ஜூன் 2-

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று (02.06.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து சேவை, பட்டா வேண்டுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மொத்தம் 491 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களில் உரியவையாகவற்றை விரைந்து ஆய்வு செய்து, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய தீர்வுகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.


இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களில் பெற்றோர் விபத்தில் பாதிக்கப்பட்ட 32 பேருக்கு ரூ.23.25 இலட்சம் மதிப்பீட்டில் ரூ.50,000 மற்றும் ரூ.75,000 மதிப்பிலான கல்வி வைப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், டையூடாமனில் நடைபெற்ற தேசிய மட்ட போட்டிகளில் மல்லர் கம்பம் பிரிவில் வெற்றி பெற்ற தருமபுரி வீரர், வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியரால் நேரில் பாராட்டப்பட்டனர்.


மேலும், சித்தேரி மற்றும் அம்மாபாளையம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்காக ரூ.5.00 இலட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. வனப்பகுதிகளில் தீயணைப்பு ஊர்திகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு பயன்படும் வகையில் ரூ.62,400 மதிப்பிலான 13 Battery-operated water sprayer கருவிகள் சமூக பொறுப்பு நிதியிலிருந்து (CSR) வழங்கப்பட்டன. இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியருடன் கூடுதல் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கல்வி மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies