Type Here to Get Search Results !

மக்கள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பென்னாகரத்தில் மக்கள் சந்திப்பு இயக்கம்.


பென்னாகரம், ஜூன் 16-

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் "மக்கள் சந்திப்பு இயக்கம்" இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த இயக்கம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மக்கள் வாழ்வாதார பிரச்சனைகளை முன்னெடுத்து பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.


இந்நிலையில், மக்கள் சந்திப்பு இயக்கம் மடம் கிராமத்தில் தொடங்கி, கூத்தபாடி, பொச்சாரம்பட்டி, ஜங்கமயனூர், சின்ன பள்ளத்தூர் வழியாக பி.அக்ரஹரத்தில் நிறைவடைந்தது. அதேபோல் திங்கட்கிழமை ஊட்டமலை கிராமத்தில் இந்த இயக்கம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக வழங்க, 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


மேலும், தர்மபுரி மாவட்டத்தின் முக்கியமான நீர்வளமான ஒகேனக்கல் உபரி நீரை, அனைத்து ஏரி, குளம், குட்டைகளுக்கும் அடைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பிரச்சார இயக்கத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பென்னாகரம் மேற்கு ஒன்றிய குழு செயலாளர் ஆ. ஜீவானந்தம் தலைமையிலான குழு வழிநடத்த, தமிழ் மாநிலக்குழு உறுப்பினர் அ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. மாதன், ஜி. சக்திவேல், மாவட்ட குழு உறுப்பினர்கள் ரவி, அன்பு, வளர்மதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் உரிமைக்காக நடப்பதில் தொடர்ந்து உறுதியாக இருக்கும் என்றும், அரசின் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies