Type Here to Get Search Results !

பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆலோசனை கூட்டம்.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் சேதுலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். இதில் மாவட்ட செயலாளர் கணேசன், மாவட்ட துணைத் தலைவர் ராஜா, மாநில பிரசார செயலாளர் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

கூட்டத்தில் வருவாய்துறை ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் 25ம் தேதி அனைத்து நிலை அலுவலர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரில் பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. முக்கிய கோரிக்கைகளில் சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், மேம்படுத்தப்பட்ட ஊதியம், கருணை அடிப்படையில் 25 சதவீத பணி வழங்குதல், ஜூலை 1ம் தேதியை வருவாய்த்துறை தினமாக அரசாணை மூலம் அறிவித்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 


“தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை கேட்க தயார் இல்லாத நிலையில், போராட்டம் நடத்தும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது,” என கூட்டத்தில் பேசப்பட்டு தீர்மானிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies