Type Here to Get Search Results !

பாலக்கோடு‌ அருகேயுள்ள குத்தலஅள்ளி கிராமத்தில் ஸ்ரீபரமேஸ்வரன் பார்வதி சுவாமி திருக்கல்யாணம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.


பாலக்கோடு, ஜூன் 11-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குத்தலஅள்ளி கிராமத்தில் ஸ்ரீபரமேஸ்வரன்  உடனுறை பார்வதி சுவாமி திருக்கல்யாணம் மற்றும் திருவீதி உலா நடந்தது.


ஸ்ரீபரமேஸ்வரன்   உடனுறை பார்வதி சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி விசாக திருவிழா மற்றும் சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை முதலே பரமேஸ்வரன் மற்றும் பார்வதிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மந்திரங்கள் முழங்க, மேளதாளங்களுடன் சுவாமி திருக்கல்யாணம் நடந்தேறியது.


இந்நிகழ்ச்சியில் பாலக்கோடு  குத்தலஅள்ளி, சவுளுரான் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து மொய் பணம் செலுத்தினர்.


இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா, ஊர்கவுண்டர், மந்திரிகவுண்டர், கிராமத்துகவுண்டர், கோல்காரகவுண்டர், கோயில்பூசாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். பக்தகள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை சுவாமி வீதி உலா நடைபெற்றது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies