Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே ரூ.1.60 கோடி மதிப்பில் அறிவுசார் மைய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.


பாலக்கோடு, ஜூன் 11–

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் கானொலி காட்சி மூலம் துவக்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட தக்காளி மார்க்கெட் அருகே ரூ.1 கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் அமைக்கும் பணிக்கு தொடக்கஅறிக்கையை அவர் வெளியிட்டார்.


அதனைத் தொடர்ந்து, அறிவுசார் மைய கட்டிட பணிக்கான பூமி பூஜை விழா பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் முரளி மற்றும் செயல் அலுவலர் இந்துமதி இணைந்து குத்துவிளக்கேற்றி வைத்தனர்.


இந்த விழாவில் ஒன்றிய துணை செயலாளர் ரவி, கவுன்சிலர்கள் சிவசங்கரி, சரவணன், மோகன், சாதிக், வகாப், ரூஹித், ஜெயந்திமோகன் மற்றும் திமுக நிர்வாகிகள் பச்சியப்பன், பெரியசாமி, சக்திவேல், குமரன், அருள்முருகன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தூய்மை பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள், ஒப்பந்ததாரர் இளஞ்சூரியன், உதயசங்கர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


இந்த அறிவுசார் மையம் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தொடர்பு, மைய சேவைகள் மற்றும் ஊராட்சி நிர்வாக வசதிகள் ஒரே இடத்தில் பெறக்கூடியதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாலக்கோடு நகரத்தின் வளர்ச்சி பாதையில் முக்கியமான இன்னொரு முன்னேற்றமாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies