Type Here to Get Search Results !

சோமனஅள்ளி ஏரியில் தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி.


பாலக்கோடு, ஜூன் 11-

தர்மபுரி மாவட்டம், தீயனைப்பு துறை மாவட்ட அலுவலர் அம்பிகா வழிகாட்டுதலின்படி, பாலக்கோடு அடுத்த சோமனஅள்ளி ஏரியில் வருவாய்த்துறை மற்றும்  தீயணைப்பு துறை இணைந்து    பொதுமக்களுக்கு  தென்மேற்கு பருவமழை  முன்னெச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி தாசில்தார் ரஜினி தலைமையில் நடந்தது.


நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் முனிராஜ், சின்னசாமி தீயனைப்பு நிலைய சிறப்பு நிலைய அலுவலர்கள் தெய்வம், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் தென்மேற்கு பருவ மழையின் போது ஏற்படும் திடிர்  வெள்ளத்தில்  பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் சிக்கி கொண்டால் எவ்வாறு மீட்பது, கிணறு, ஆறு மற்றும் ஏரிகளில் குளிக்கும் போது தவறுதலாக தண்ணீரில் சிக்கி கொண்டால் எவ்வாறு தப்பிப்பது, மேலும் உடன் இருப்பவர்கள் தண்ணீரில் சிக்கி மூழ்கும் போது நீளமான குச்சி அல்லது கயிறு மூலம் அவர்களை மீட்பது, மரக்கட்டைகள், டியூப்கள், பிளாஸ்டிக் கேன்களை அவர்களின் அருகில் வீசுவதன் மூலம் அதனை பிடித்து உயிர் பிழைக்க வாய்ப்பு ஏற்படும் இது போன்றதற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த பயிற்சி அளித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள், வருவாய் ஆய்வாளர் மேகலா, கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரன், புலிகரை உள்வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies