தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் – 8 வாகனங்கள் பறிமுதல், உரிமை ஆவணங்களை தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு அறிவிப்பு. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 13 ஜூன், 2025

தருமபுரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் கடத்தல் – 8 வாகனங்கள் பறிமுதல், உரிமை ஆவணங்களை தாக்கல் செய்ய பொதுமக்களுக்கு அறிவிப்பு.


தருமபுரி, ஜூன் 13:

தருமபுரி மாவட்டத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை லாப நோக்கில் கடத்தி விற்பனை செய்ததாகப் புகாரளிக்கப்பட்ட 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணையின் கீழ் (FIR) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி வட்டங்களில் பறிமுதல் செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார். இதில் 2 சக்கர வாகனங்கள் மூன்று, 4 சக்கர வாகனம் ஒன்று, 6 சக்கர வாகனங்கள் நான்கு ஆகியவை உள்ளடக்கம்.


பல்வேறு வாகன உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டும், உரிய ஆவணங்களுடன் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. மேலும், இந்த வாகனங்களுக்கு உரிமை கோரி எவரும் இதுவரை ஆவணங்களுடன் முன்வராததால், மின் ஆளுமை (e-Auction) முறையில் ஏலம் விடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


உரிமையாளர்களுக்கு அறிவிப்பு:

வாகனங்கள் தங்களுடையது என கருதும் நபர்கள், இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 10 நாட்களுக்குள், வாகன உரிமை தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களுடன் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலரிடம் தொடர்பு கொண்டு உரிமை கோரலாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.


கைப்பற்றப்பட்ட வாகனங்களின் விவரம்:

S.No Cr.No சக்கர வகை பதிவு எண் வாகன வகை
1 54/2023 2 சக்கரம் எண் இல்லை TVS XL Super Heavy Duty
2 162/2023 2 சக்கரம் TN 29 CX 8391 TVS XL Super Heavy Duty
3 47/2024 2 சக்கரம் TN 70 J 4799 TVS XL Super Heavy Duty
4 37/2025 4 சக்கரம் TN 24 K 2995 TATA 207
5 63/2021 6 சக்கரம் TN 10 E 3976 Eicher 1110
6 44/2022 6 சக்கரம் TN 30 BL 9922 Eicher Lorry
7 67/2022 6 சக்கரம் TN 31 H 6760 Eicher Van
8 165/2022 6 சக்கரம் TN 34 D 8571 Ashok Leyland Container Lorry

இச்செய்தியினை தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad