Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 13:

இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுரைகளின் பேரில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கான புதிய வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, இன்று (13.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் அலுவலராகவும், மாவட்ட ஆட்சியராகவும் செயல்பட்டு வரும் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். பயிற்சியில், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு மற்றும் மேம்பாடு, வாக்குச்சாவடிகளில் ஏற்படுத்த வேண்டிய உட்கட்டமைப்பு வசதிகள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும், நீக்கும், திருத்தும் நடைமுறைகள், வாக்குச்சாவடிகளின் அமைப்பு, சீரமைப்புகள் குறித்தும் விரிவாக வழிகாட்டப்பட்டது.


தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், 57 – பாலக்கோடு, 58 – பென்னாகரம், 59 – தருமபுரி, 60 – பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் 61 – அரூர் (தனிச்சிறப்பு தொகுதி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணிகள் தொடர்பாகவும் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.


மேலும், தேர்தல் பணிகளில் பயன்படுத்தப்படும் தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் மென்பொருட்கள் குறித்து, அவற்றைப் பயன்படுத்தும் முறைகள், வாக்காளர் பட்டியலில் இறந்துபோனவர்கள் மற்றும் குடிபெயர்ந்த நபர்களை நீக்குவது போன்ற தகவல்கள் மற்றும் நடைமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது.


இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, மாவட்ட வருவாய் அலுவலர் (சிப்காட்) திருமதி பூங்கோதை, அரசுத்துறை உயர் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வட்டாட்சியர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த பயிற்சி வகுப்பின் வாயிலாக, தருமபுரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள வருங்கால தேர்தல் பணிகள் மேலும் திறம்பட நடைபெறும் என்பதில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies