Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டம் முழுவதும் சிறுபாசனக் கணக்கெடுப்பு; மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஜூன் –

தமிழகத்தில் சிறுபாசனத்துறையை மேம்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள சிறுபாசன அமைப்புகள், நீர்நிலைகள் தொடர்பான 7வது சிறுபாசனக் கணக்கெடுப்பு ஜூன் 2025இல் துவங்க உள்ளது. தருமபுரி மாவட்டத்தில், இதில் ஈடுபட உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தலைமையில் பயிற்சி நடைபெற்றது.

இந்த கணக்கெடுப்பில் 2,000 ஹெக்டேருக்கு குறைவான பாசனம் பெறும் நிலங்களில் உள்ள நீர் ஆதாரங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படும். தனிப்பட்ட கிணறு, ஆழ்துளைக்கிணறு, பாசன செலவுகள், நிதி ஆதாரம், மோட்டார் திறன், அரசு மானியப் பயன்பாடு உள்ளிட்ட தகவல்கள் பதிவு செய்யப்படும்.


இந்த திட்டத்தின் நோக்கம் – நாட்டளவில் சிறுபாசன திட்டங்களுக்கு துல்லியமான, நம்பகமான புள்ளி விவரங்களை உருவாக்கி, நீர்வள மேம்பாட்டுக்கான அடித்தளமாக பயன்படுத்துவதாகும். 2023-24 ஆம் ஆண்டை மேற்கோள் ஆண்டாக கொண்டு, இந்த 7வது சிறுபாசன கணக்கெடுப்புடன், 2வது நீர்நிலை கணக்கெடுப்பும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


மாவட்டத்தில் இந்த கணக்கெடுப்புக்கான செயல்பாட்டை, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமை வகிக்க, புள்ளியியல் துணை இயக்குநர் ஒருங்கிணைப்பாளராக, வட்டாட்சியர்கள் உறுப்பினர்களாக செயல்படுகிறார்கள். கணக்கெடுப்பு மின்னணு செயலியில் (NIC portal) நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies