Type Here to Get Search Results !

மினிபஸ் திட்டம்; தருமபுரியில் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கிவைத்தார்.


தருமபுரி, ஜூன் 16-

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூரில், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், போக்குவரத்துத் துறையின் சார்பில், புதிய விரிவான மினிபஸ் (சிற்றுந்து) திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனையடுத்து, மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.1194 கோடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவுற்ற பணிகளையும் திறந்து வைத்து, பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.


இந்த நிகழ்ச்சி தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் காணொளி காட்சியின் வாயிலாக நேரலை செய்யப்பட்டபோது, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் பங்கேற்று, 26 புதிய மினிபஸ்களுக்கு கொடியசைத்து சேவையைத் தொடங்கி வைத்து, மினிபஸ் வழித்தடங்களுக்கு ஆணைகளை வழங்கினார். மேலும், “சாலை பாதுகாப்பு - உயிர் பாதுகாப்பு” குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன.


இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.பி. வெங்கடேஷ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஷ்வரன், போக்குவரத்துத் துறை அலுவலர்கள், நகர்மன்ற தலைவர் திருமதி மா. லட்சுமி, முன்னாள் எம்.எல்.ஏ. திரு. தாதங்கம் சுப்பிரமணி, வாகன ஆய்வாளர்கள், நகராட்சி ஆணையாளர், மினிபஸ் உரிமையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies