Type Here to Get Search Results !

மகேந்திரமங்கலம் அருகே 9ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்ற பைக் மெக்கானிக் – போக்சோவில் கைது.


பாலக்கோடு, ஜூன் 17 –

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே உள்ள மலை கிராமத்தில் வசித்து வரும் விவசாயியின் 15 வயது மகள், ராயக்கோட்டையில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியில் பைக் மெக்கானிக்காக வேலை செய்து வந்தவர் திருப்பத்தூர் மாவட்டம் சின்னா கவுண்டனூர் அருகே உள்ள ரெட்டியூர் கிராமத்தை சேர்ந்த சூர்யா (வயது 24).

இருவருக்கும் கடந்த சில மாதங்களாக நெருக்கமான பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த ஜூன் 9ம் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவியை, ஆசை வார்த்தைகளால் பிடிவாதமாக அழைத்துச்சென்று, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் 5 நாட்கள் வைத்திருந்தார்.


மாணவி வீடு திரும்பவில்லை என்பதையடுத்து, பெற்றோர் மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், மாணவி பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடந்த சம்பவங்களை தெரிவித்தார். பாலியல் வன்புணர்வு மற்றும் சிறுமியை கடத்தல் குற்றங்களுக்காக, சூர்யாவுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி சிறையில் அடைத்தனர்.


பெற்றோர்களிடம் செல்ல விருப்பம் இல்லை எனக் கூறிய மாணவியை, தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகர் சிறுமி பாதுகாப்பு மையத்தில் அடைக்கப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies