Type Here to Get Search Results !

இரத்த தானம் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு பென்னாகரத்தில் விழிப்புணர்வு முகாம்.


பென்னாகரம், ஜூன் 15-

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில், இரத்ததான கொடையாளர்கள் தினத்தையொட்டி ஸ்ரீ தேவி மஹா டிரஸ்ட் சார்பில் (ஜூன் 14) தன்னார்வ இரத்ததான முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மருத்துவர் அருண் பிரசாத் அவர்கள் துவக்கி வைத்து, இரத்ததானம் குறித்து விழிப்புணர்வும், உறுதி மொழியும் வழங்கினார். தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் இரத்ததானத்தில் ஈடுபட்டனர்.


இந்த முகாமிற்கு ஆதரமாக செயல்பட்ட திரு. கமல் பாலாஜி எலக்ட்ரிக்கல்ஸ், திரு. சம்பத், ஆசிரியர் வீரமணி, செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர். இந்த முகாமில் 15 மேற்பட்ட நலன்விரும்பிகள் இரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு டிரஸ்ட் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் டிரஸ்ட் நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சமூகத்துக்கான ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தினர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies