Type Here to Get Search Results !

வசதியற்ற மகளிருக்கு வாழ்வாதார மேம்பாட்டு மானியம் – மாவட்ட ஆட்சியர் தகவல்.


தருமபுரி, ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டத்தில் சமூகத்தில் பின்தங்கிய கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மகளிரின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025–2026 நிதியாண்டுக்காக, ரூ.10,000 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக இயந்திரங்கள் வாங்க, மொத்த விலையின் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 வரை மானியம் வழங்கப்படும்.


இந்த திட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்; வருமானம் ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பிறப்பிடச் சான்று, பிறந்த தேதி, வருமானச் சான்று, கைம்பெண்/கைவிடப்பட்டோர் சான்று போன்றவை அவசியம்.


விண்ணப்பங்கள் (23.06.2025) ஆடவை (ஆனி) 09 முதல் (14.07.2025) ஆடவை (ஆனி) 30 வரை தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் (மாவட்ட ஆட்சியர் கூடுதல் கட்டடம் பின்புறம்) சமர்ப்பிக்க வேண்டும். காலவதியான விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. மேலதிக தகவல்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் திரு. ரெ. சதீஷ், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies