Type Here to Get Search Results !

தருமபுரியில் வீடற்றோருக்கான தங்குமிடத்தையும் தொல்லியல் பகுதிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு.


தருமபுரி, ஜூன் 07-

தருமபுரி மாவட்டம், தருமபுரி நகராட்சி எல்லைக்குள் உள்ள அன்னசாகரம் - கங்கரன் கொட்டாய் பகுதியில் அமைந்துள்ள நகர்ப்புற வீடற்றவர்களுக்கான தங்குமிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (07.06.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இங்கு உள்ள அடிப்படை வசதிகள் — மெத்தைகள், படுக்கை விரிப்புகள், போர்வைகள், மின்சார வசதிகள், விசிறிகள், சுத்தமான குடிநீர், கழிப்பறைகள், முதலுதவி மற்றும் ஆரம்ப சுகாதார வசதிகள், பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவை குறித்து விரிவாக பரிசீலித்து, வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் தகவல்களை கேட்டறிந்தார்.


அதனைத் தொடர்ந்து, நல்லம்பள்ளி வட்டம், பங்கு நத்தம் கிராமத்தில் உள்ள சர்வே எண் 61 மற்றும் 62 ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுமார் 59 ஏக்கர் பரப்பளவிலான தொல்லியல் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பெருங்கற்கால ஈம சின்னங்கள் கொண்ட பகுதிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


இந்த ஆய்வின்போது, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி ஆர். காயத்ரி, தொல்லியல் துறை அலுவலர் திரு. வெங்கடகுரு பிரபு, நல்லம்பள்ளி வட்டாட்சியர் திரு. சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies