Type Here to Get Search Results !

பாலக்கோடு பேரூராட்சியில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை – தர்மபுரி எம்.பி. அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.


பாலக்கோடும் ஆடவை (ஆனி) 05-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட பல வார்டுகளில் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, அதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.


பேரூராட்சி தலைவர் பி.கே. முரளியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்த்தகிரி நகர், ஜிம்மா மஜித் தெரு, சையத்பீர் தெரு, சையத்திலாவார் தெரு, பாபு சாயுபு தெரு, இந்திராநகர், அப்துல்லா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை பணி துவங்கப்பட்டது.


திமுக நாடாளுமன்ற உறுப்பினர் வக்கீல் ஆ.மணி, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் திமுக மாவட்ட, ஒன்றிய, பகுதி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சமூக நலத்திற்கான இந்த பணியை வரவேற்றனர்.  

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies