Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம்; மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு.


தருமபுரி, ஜூன் 19-

தருமபுரி மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படாமல் தங்களை பாதுகாத்துக் கொள்ள, சாலை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும், இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக இன்று (19.06.2025) தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அவரது தலைமையில் நடைபெற்றது. இதில், போக்குவரத்து மற்றும் காவல் துறை அலுவலர்கள், வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அந்த கூட்டத்தில் மாவட்டத்தில் விபத்துகள் குறைய மக்கள் சாலைவிதிகளை கடைபிடிக்க வேண்டியதின் அவசியம், பாதுகாப்பான வேகத்தில் வாகன ஓட்ட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், “விபத்தில்லா தருமபுரி” எனும் இலக்கை எட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.


இதையடுத்து, மாநிலத்தின் முதலமைச்சர் காலை உணவு திட்டம், அரசு இட ஆக்கிரமிப்பு அகற்றம், ஒகேனக்கல் சுற்றுலா மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies