Type Here to Get Search Results !

பஞ்சப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் விழிப்புணர்வு கொண்டாட்டம்.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11வது சர்வதேச யோகா தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சியுடன் நடைப்பெற்றது. யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாதையன் சைக்கிள் ஊர்வலத்துக்கு தலைமை வகித்து தொடக்கமளித்தார்.


மருத்துவப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற பேரணி, பஞ்சப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து சின்னாறு அணை வரை சென்று யோகாசன பயிற்சி, மூச்சுப் பயிற்சி மூலம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தியது.


பங்கேற்பாளர்களுக்கு டிஷர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கப்பட்டன. வட்டார மருத்துவ அலுவலர் சிவகுரு யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கினார். இயற்கை மருத்துவர் பிரித்விராஜ் மற்றும் பணியாளர் வெங்கடேஸ்வரி யோகாசன பயிற்சியை அளித்தனர். மருத்துவ அலுவலர் சோனியா, செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies