Type Here to Get Search Results !

பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைக்க பூமி பூஜை.


பாலக்கோடு, ஆடவை (ஆனி) 06-

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தக்காளி மார்க்கெட் அருகே பொதுமக்களின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பணிகள் பேரூராட்சி சிறப்பு நிதி மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.


பூமி பூஜை நிகழ்ச்சி பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட பொருளாளர் முருகன், ஒன்றிய துணைச் செயலாளர் பி.எல்.ஆர். ரவி, கவுன்சிலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூமி பூஜையைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்தார். இதில் கிளைச் செயலாளர்கள் முருகேசன், கணேசன், ஒப்பந்ததாரர்கள் உதயகுமார், இளஞ்சூரியன், நிர்வாகிகள் பெரியசாமி, ராஜசேகர், அருள், ராமகிருஷ்ணன், சிவா, சக்திவேல், பனங்காடு குமரன், முருகன், இளைஞர் அணி பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பங்கேற்றனர்.


இந்நிகழ்வில் பொதுமக்களும் திரளாக பங்கேற்று, தண்ணீர் வசதி மேம்பாட்டிற்கான நடவடிக்கையை வரவேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies