தருமபுரி, ஜூன் 10-
தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள Friends காலனியில் குப்பைகள் அதிகமாக கொட்டப்படுவதால் சுகாதாரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் பின்புறமும் அருகிலுள்ள கோவிலையும் சுற்றி குப்பைகள் குவிந்து காணப்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். குறிப்பாக, குப்பைகளில் sanitary pad-கள் போடப்படுவதால் நாய்கள் அவற்றை இழுத்து சாலையில் வீசுவதும் மிகவும் மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதுபற்றிப் பலமுறை பஞ்சாயத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்கள் தினமும் இந்த நிலையை பார்த்துக்கொண்டு தவிக்கின்றனர்.
இதுகுறித்து ஒருவர், “இங்கே சுகாதாரம் கெட்டு வருகிறது. குழந்தைகளும் பெரியவர்களும் பாதிக்கப்படக்கூடும். இது பஞ்சாயத்து கவனிக்க வேண்டிய விஷயம்” என தெரிவித்தார். அதனால், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு உடனடியாக சுத்தம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக