Type Here to Get Search Results !

புத்தி இல்லாம கேள்வி கேட்காதீங்க. எங்க ஜெனரல் மேனேஜரை போன் பண்ணிக் கேளுங்க - கடத்தூர் கூட்டுறவு வாங்கி மேலாளரின் அடாவடி பேச்சு.


கடத்தூர், ஜூன் 10-

தருமபுரி மாவட்டத்தில் உள்ள கடத்தூர் மத்திய கூட்டுறவு வங்கியில் இன்று காலை ஒரு வாடிக்கையாளருக்கும் வங்கி மேலாளருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதில் வங்கி மேலாளர் சின்னசாமி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக புகார்கள் வந்துள்ளன.


இன்று காலை ஒரு வாடிக்கையாளர் தன் தங்க நகையை அடமானம் வைத்து கடன் வாங்க வங்கிக்கு வந்தார். அப்போது வங்கி மேலாளர், "ஒரு நாளைக்கு 5 பேருக்கு மட்டுமே தங்க அடமான கடன் தர முடியும். இன்று குவியா முடிந்துவிட்டது" என்று சொன்னார்.


இதைக் கேட்ட வாடிக்கையாளர், "இது புதிய விதியா? எப்போது இருந்து இந்த மாற்றம்?" என்று கேட்டார். அதற்கு மேலாளர், "வங்கியில் பணம் இல்லை. உனக்கு கடன் வேண்டும்னா வேற வங்கிக்குப் போ" என்று கூறியதாக புகார் எழுந்துள்ளது. அங்கு இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் "இது அரசு விதியா?" என்று கேட்டபோது, மேலாளர் "புத்தி இல்லாம கேள்வி கேட்காதீங்க. எங்க ஜெனரல் மேனேஜரை போன் பண்ணிக் கேளுங்க" என்று கோபத்தோடு பதில் அளித்தார்.


இந்த நடவடிக்கையால் பல வாடிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். "நாங்க சட்டப்படி உரிமை கேட்டோம். ஆனால் வங்கி மேலாளர் மரியாதை இல்லாமல், கடுமையாக பேசியிருக்கிறார்" என்று ஒரு வாடிக்கையாளர் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தருமபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் கூட்டுறவு வங்கி உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து இதுவரை வங்கி அதிகாரிகள் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. கூட்டுறவு வங்கியில் உண்மையில் பண பற்றாக்குறை உள்ளதா என்பது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies