![]() |
மாதிரி படம். |
பாலக்கோடு, ஜூன் 9:
தர்மபுரி மாவட்டம், தர்மபுரி முதல் ஓசூர் வரை அமைக்கப்படும் புதிய தேசிய நெடுஞ்சாலை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜிட்டாண்டஅள்ளி பகுதியில் சாலை அமைக்கும் பணிகளில் மண் நிரப்பும் வேலையில் ஈடுபட்டிருந்த வெளிமாநில கூலி தொழிலாளி ஒருவர் விபத்தில் உயிரிழந்தார்.
மரணமடைந்தவர் சித்தகலாயா சேகர் (வயது 40) – தெலுங்கானா மாநிலம் குண்பாவால் மாவட்டம், ஜகலாம்பால் பகுதியைச் சேர்ந்தவர். நேற்று முன்தினம், சேகர் மண் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அருகே வேலை பார்த்த கிரேடர் வாகன ஓட்டுநர் அஜாக்கிரதையாக வாகனத்தை பின்னோக்கி இயக்கிய போது, அதன் பின்புறம் சேகரின் தலையில் மோதி, அவர் மயக்கமடைந்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதித்து, ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என்று அறிவித்தனர். இந்த விபத்துக்கு காரணமான கிரேடர் ஓட்டுநருக்கு எதிராக, மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விபத்து, பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரிதாபம் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.