Type Here to Get Search Results !

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – ஜூன் 6ஆம் தேதி நடைபெறுகிறது.


தருமபுரி, ஜூன் 04-

தருமபுரி மாவட்டம் மற்றும் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் கோரிக்கைகள், பிரச்சனைகள் மற்றும் குறைகளை தீர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


அதன்படி, ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 06.06.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில், தருமபுரி வருவாய் கோட்ட அலுவலர் திருமதி இரா.காயத்ரி அவர்கள் தலைமையிலான அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.


விவசாயிகளின் நலன்களை முன்னிறுத்தி, அவர்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து, உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கில் நடைபெறும் இக்கூட்டத்தில் அனைத்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென கோரப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies