தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தாட்கோ நிறுவனம், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து Advanced GST & Income Tax, Industry 4.0 உற்பத்தி தொழில்நுட்பம், Digital Skills மூலம் BPO/ITES, UI/UX இணைய தொழில்நுட்பம், மற்றும் Digital Marketing ஆகிய தலைப்புகளில் பயிற்சிகளை இலவசமாக வழங்க உள்ளது. இந்த பயிற்சியில் பங்கேற்க, 2021 முதல் 2024 வரை பட்டம் பெற்ற 21 முதல் 30 வயதுக்குள் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
பயிற்சி காலம் 55 நாட்கள். பயிற்சி பெறும் இளைஞர்களுக்கான தங்கும் வசதி மற்றும் உணவுக்கான செலவுகளை தாட்கோ ஏற்கும். பயிற்சி முடிவில் சான்றிதழும், வேலை வாய்ப்பு வாய்ப்பும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு, தாட்கோ மாவட்ட அலுவலகம் – எண் 3, சாலை விநாயகர் கோவில் ரோடு, விருப்பாட்சிப்புரம், தருமபுரி என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம்.