Type Here to Get Search Results !

தருமபுரியில் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி.


தருமபுரி, ஜூன் 12-

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (12.06.2025) குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்று, விழிப்புணர்வு பேரணியையும் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.


அத்துடன், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தும் கையெழுத்து இயக்கத்தையும் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இலக்கியம்பட்டி வரை நடந்த இந்த பேரணியில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்துகொண்டனர்.


மேலும், குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பை தீவிரமாக நிலைநாட்ட மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். நிகழ்ச்சியில் பல்வேறு அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.


இந்த நிகழ்வின் மூலம், கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்தி, 14 வயதுக்குள் குழந்தைகளை எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாதென உறுதி எடுக்கப்பட்டது. குழந்தைத் தொழிலாளர் தொடர்பான தகவல்களை www.pencil.gov.in மற்றும் 1800 4252 650 / 155214 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் புகாரளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies