தருமபுரி, ஆடவை (ஆனி) 13-
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச போதை ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” நோக்கில் Drug Free TN – Selfie Stand விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (27.06.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆட்சியர் அவர்களே Selfie Stand-ல் புகைப்படம் எடுத்துக்கொண்டு விழிப்புணர்வுக்கு முதல் குரலாக இருந்தார். இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவியர்கள் சுமார் 100 பேர் Selfie Stand-ல் புகைப்படம் எடுத்து, “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” நோக்கத்தில் தங்களது உறுதியையும் வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்வில் உதவி ஆணையர் (ஆயம்) திருமதி நர்மதா, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழிப்புணர்வை வலியுறுத்தினர்.