Type Here to Get Search Results !

கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

தருமபுரி, ஜூன் 8:

தருமபுரி மாவட்டம் கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.


அந்த மருத்துவமனையில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், ஸ்கேன் மற்றும் ஆய்வக சேவைகள், உணவுப் பட்டியல், இரத்த சோகை தடுப்பு மாத்திரைகள் போன்றவை குறித்தும், மேலும் குழந்தைகள் நலப்பிரிவு, பொது மருத்துவம், விஷவிஷமுண்ணல் சிகிச்சைகள் மற்றும் தேவையான மருந்துகளின் இருப்பு போன்ற பல்வேறு அம்சங்களை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். மருத்துவர்கள் நோயாளிகளிடம் அதிக அக்கறையுடன் பரிசீலனையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், சுகாதார நிலையத்தின் சேவைகள் உயர்வாக இருக்க வேண்டும் என்றும் ஆட்சியர் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, தாளநத்தம் ஊராட்சி பொது நூலகம் மற்றும் சமுதாய கூடத்தையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, நூல்களின் நிலை, மின்சார வசதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர், இலக்கியம்பட்டி அருகே உள்ள தமிழர் மரபுச் சந்தையை பார்வையிட்டு, அங்கு விற்பனை செய்யப்படும் பாரம்பரிய நாட்டு ரக காய்கறிகள், மூலிகைகள், சிறுதானியங்கள், கீரைகள் உள்ளிட்ட விவசாயப்பொருட்களின் சந்தை நிலைமை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. இரவிச்சந்திரன், மருத்துவர்கள், அரசுத் துறை அலுவலர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies