அரூர் NN மஹால் திருமண மண்டபத்தில் திமுக ஆதிதிராவிட நலக்குழு சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு மண்டல அளவிலான மாபெரும் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளர் A. கிருஷ்ணசாமி MLA தலைமையிலான இந்த நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளர் அந்தியூர் செல்வராஜ் MP, மாணவர் அணி செயலாளர் ஆர். ராஜீவ்காந்தி, தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் முனைவர் பி. பழனியப்பன், தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் ஆ. மணி MP, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் தே. மதியழகன் MLA ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் K. திருமால் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில நிர்வாகிகள் மருதூர் ஏ. இராமலிங்கம், வி.பி. இராஜன், திப்பம்பட்டி ஆறுச்சாமி, செ. புஷ்பராஜ், சா. இராசேந்திரன், பி. துரைசாமி, ஊட்டி மு. பொன்தோஸ், மு. பரமானந்தம், மயிலை சி. தசரதன், எஸ். மாரியப்பன் கென்னடி, தகடூர் கொ. ரமேஷ் உள்ளிட்டோர் நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.
மேலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த ஆதி திராவிட நலக்குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள், சார்பு அணிகள், ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரளாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். நிகழ்வு முடிவில், தருமபுரி கிழக்கு மாவட்ட நிர்வாகி N. ஸ்டாலின் நன்றி மொழி வழங்கினார்.
.gif)

