Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்ட வளர்ச்சி குழு கூட்டம் – நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி, ஜூன் 18-

தருமபுரி மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் இன்று (18.06.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.மணி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், இ.ஆ.ப., முன்னிலை வகித்தார்.


இக்கூட்டத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் – பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, ஜல் ஜீவன் மிஷன், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டம், தமிழ்நாடு பைபர்நெட், சமக்ரா சிக்ஷா, மின் இணைப்பு திட்டங்கள், கால்நடை பராமரிப்பு, வனத்துறை, நகராட்சி திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகள் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், முன்னேற்றம், இடையூறுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.


மாவட்டத்தில் மத்திய, மாநில நிதியினால் செயல்படும் திட்டங்களை நேர்மையாகவும் விரைவாகவும் நடைமுறைப்படுத்த துறை அலுவலர்கள் உறுதி தேவை என்று திரு. ஆ.மணி வலியுறுத்தினார். ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் உடனடியாக தெரிவித்து தீர்வு காண ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.


கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி. வெங்கடேஷ்வரன், ஆ. கோவிந்தசாமி, வே. சம்பத்குமார், கூடுதல் ஆட்சியர் கே. சரண்யா, வன அலுவலர் ராஜாங்கம், திட்ட இயக்குநர்கள், நலக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies