Type Here to Get Search Results !

பாலக்கோட்டில் மாற்றுத் திறனாளிகள் திமுகவில் இணைந்தனர் – தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் ஆனந்தன் தலைமையில் இணைப்பு நிகழ்ச்சி.


பாலக்கோடு, ஜூன் 18-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு திமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் பச்சியப்பன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் செட்டியப்பன் முன்னிலை வகித்தார்.

இதில், திமுக பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்தன் தலைமையில், நாகராஜ், மாதேஷ், கிருஷ்ணன், நந்தகுமார், பெரியசாமி, விஜயன், மணி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் திமுகவில் இணைந்தனர். இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.


இந்நிகழ்ச்சியில் ஒன்றியஅவைத் தலைவர் ராஜாமணி, முன்னாள் ஒன்றிய குழுத் தலைவர் நாகராஜன், மாவட்ட பொறியாளர் அணி துணைத் தலைவர் அழகுசிங்கம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குட்டி, கிளைச் செயலாளர் குட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு, மாற்றுத் திறனாளிகளின் அரசியல் பங்கேற்பை ஊக்குவிக்கத் திட்டமிடப்பட்டதோடு, அவர்களின் சமூக பங்காற்றலையும் வலியுறுத்தியது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies