Type Here to Get Search Results !

அமானிமல்லாபுரத்தில் பெட்டிக்கடையில் குட்கா விற்ற பெண் கைது.


பாலக்கோடு, ஜூன் 2:

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே உள்ள அமானிமல்லாபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக ஹான்ஸ், தூலிப் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். குற்றச்செயல் குறித்து ரகசிய தகவலை தொடர்ந்து, மாரண்டஅள்ளி போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டனர். அதன்பேரில், அமானிமல்லாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாதம்மாள் (வயது 45) என்பவர் நடத்தும் பெட்டி கடையில் அனுமதியின்றி குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, கடையில் பதுக்கி வைத்திருந்த சுமார் ரூ.2,000 மதிப்புள்ள ஹான்ஸ், தூலிப் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies