Type Here to Get Search Results !

பொம்மிடி ரயில்நிலையத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


பொம்மிடி, ஆடவை (ஆனி) 14-

தருமபுரி மாவட்டம் பொம்மிடி ரயில்நிலையம் முன்பு, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில்பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று மாபெரும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஆசாம்கான் தலைமையினும், செயலாளர் ஜெபசிங் கோரிக்கைகளை வலியுறுத்தினார். 


ஆர்ப்பாட்டத்தின் போது அரக்கோணம் – சேலம் பாசஞ்சர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், அரக்கோணம் – ஜோலார்பேட்டை மெமு ரயிலை சேலம் வரை நீட்டிக்க வேண்டும், மற்றும் பொம்மிடி ரயில்நிலையத்தில் முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


இந்த நிகழ்வில் தென்னக ரயில்வே பயணிகள் சங்கத்தின் நிர்வாகிகள் அறிவழகன், காமராஜ் உள்ளிட்டோர், வணிகர் சங்க உறுப்பினர்கள், பயணிகள் நல சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்வை வெற்றிகரமாக நடத்த கார்த்திகேயன், இளங்கோவன், சிவக்குமார் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். பொம்மிடி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு ரயில்வே நிர்வாகத்தால் விரைவில் நிறைவேற்றப்படும் எனக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies