தருமபுரி மாவட்டம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் இல்லங்களில் தங்கி கல்வி பயில்கிற குழந்தைகளுக்காக, மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் (Counsellor) பணிக்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் ஆர். கோபிநாதம்பட்டி அரசு குழந்தைகள் இல்லத்திற்கும், பஞ்சப்பள்ளி அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கும் தலா இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. கோபிநாதம்பட்டிக்கு இரண்டு பெண் ஆற்றுப்படுத்துநர்களும், பஞ்சப்பள்ளிக்கு இரண்டு ஆண் ஆற்றுப்படுத்துநர்களும் தேவைப்படுகிறது.
இப்பதவிக்கு சமூகப்பணி / சமூகவியல் / உளவியல் / பொதுசுகாதாரம் மற்றும் ஆற்றுப்படுத்துதல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்களாக உள்ளனர். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்படும் ஆற்றுப்படுத்துநர்களுக்கு, ஒரு மாதத்திற்கு 9 நாட்கள் வரையிலான பணிநாள்களுக்கு, ஒரு நாளுக்கு ரூ.1,000/- வீதம் (போக்குவரத்து செலவு உட்பட) மதிப்பூதியம் வழங்கப்படும். இது ஒரு ஆண்டுக்கு அதிகபட்சம் 324 நாட்களுக்கு வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் https://dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, உரிய கல்விச்சான்றிதழ்களுடன் பூர்த்தி செய்து, கீழ்க்கண்ட முகவரிக்கு நேரடியாகவோ, தபால் மூலமாகவோ 08.07.2025 மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்கலாம்: கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், ஆர். கோபிநாதம்பட்டி / பஞ்சப்பள்ளி, தருமபுரி மாவட்டம். என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் அறிவித்துள்ளார்.