Type Here to Get Search Results !

போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கூட்டம் – பொப்பிடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


பாலக்கோடு, ஜூன் 07-

பாலக்கோடு அருகேயுள்ள பொப்பிடி அரசு உயர் நிலைப் பள்ளி வளாகத்தில், போதை பொருள் பயன்பாட்டை எதிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெய்குமார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் “போதை இல்லா தமிழ்நாடு” உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு உரைகள் நிகழ்த்தப்பட்டன.


தனியார் தொண்டு நிறுவன தலைவர் சம்பத்குமார் மற்றும் கோபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். போதைப் பழக்கம் ஒரு தனிநபரை மட்டுமின்றி, அவரது குடும்பத்தையும், சமுதாயத்தையும் அழித்து விடக்கூடிய ஆபத்தான விஷயமாக இருப்பதை, அவர்களது வாழ்க்கைப் பகிர்வுகள் மற்றும் நிகழ்ந்த நிகழ்வுகள் மூலம் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

இதையடுத்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மாணவர்கள் அனைவர் மும், “போதைப் பழக்கத்திலிருந்து விடுபட்டு, ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்குவோம்” என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வை பெற்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies