கடத்தூர், ஜூன் 05-
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி உட்கோட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் சிறப்பு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூக்கனூர்-அரூர் சாலையில் தாசன் நகரிலிருந்து தொங்கனூர் வரை மொத்தமாக 500 மரக்கன்றுகள் நட்டல் செய்யப்பட்டது.
இந்த நிகழ்வை நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் திரு. நாகராஜி அவர்கள் மரக்கன்று நடுவதன் மூலம் தொடங்கி வைத்தார். அவருடன், நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் திரு. நரசிம்மன், கிரஸ்ட் இந்தியா பவுண்டேசன் முதன்மை இயக்குநர் திரு. பொம்மிடி முருகேசன் மற்றும் சாலை ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
.gif)

