Type Here to Get Search Results !

தருமபுரியில் பழங்குடியினருக்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் – ஜூன் 15 முதல் 30 வரை


தருமபுரி, ஜூன் 04-

தருமபுரி மாவட்ட பழங்குடியினர் நலத் திட்ட அலுவலகத்தின் சார்பில், மாநில அரசின் அனைத்து பொது மற்றும் தனிநபர் நலத் திட்டங்கள், குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள (PVTG) பழங்குடியினர் மக்களுக்கு சென்றடையும் வகையில், 15.06.2025 முதல் 30.06.2025 வரை சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன.


இந்த முகாம்கள் மூலம் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, ஆயுஷ்மான் பாரத் கார்டு (PM-JAY), சாதி சான்றிதழ்கள், குடியிருப்பு சான்றிதழ், கிசான் கிரெடிட் கார்டு (KCC), பிரதமர் விவசாய உதவி (PM-KISAN), ஜன்தன் வங்கி கணக்கு, முதியோர் ஓய்வூதியம், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் திட்டங்கள் (MGNREGS, முத்ரா கடன்), பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள் (PMMVY, ICDS) போன்ற பல்வேறு அரசு நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


இத்திட்டங்கள் பயனாளர்களிடம் நேரடியாகச் சென்றடையும் வகையில், மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட பகுதிகளை மையமாக கொண்டு அலுவலகங்களில் இந்த விழிப்புணர்வு முகாம்கள் நடைபெறுகின்றன.


முகாம்கள் பின்வரும் இடங்களில் நடைபெற உள்ளன: பாப்பிரெட்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.06.2025 அன்று, அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 20.06.2025 அன்று, பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் 24.06.2025 அன்று, பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27.06.2025 அன்று மற்றும் தருமபுரி, நல்லம்பள்ளி, காரிமங்கலம் பகுதிகளுக்காக தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் 30.06.2025 அன்று நடைபெறும். அனைத்து முகாம்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.


இதனால், மாவட்டத்தின் பழங்குடியினர் மக்களும், குறிப்பாக PVTG பிரிவை சேர்ந்தவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆதரவுகளைப் பெறும் வகையில் இந்த விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies