தருமபுரி, ஜூன் 5 –
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தருமபுரி நகராட்சி மற்றும் மை தருமபுரி அறக்கட்டளை இணைந்து தருமபுரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 234 மரக்கன்றுகள் நடவு செய்தனர். அழகாபுரி மற்றும் எஸ்.வி. சாலை பகுதிகளில் இந்த மரக்கன்றுகள் நட்டல் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் டான் சிக்சாலையா பள்ளி மற்றும் கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணியில் தங்களின் பங்களிப்பை வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக தருமபுரி நகர் மன்றத் தலைவர் திருமதி லட்சுமி நாட்டார் மாது, துணைத் தலைவர் திருமதி நித்யா அன்பழகன், நகர நல அலுவலர் இலட்சியவர்னா, நகராட்சி ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
மேலும், டான் சிக்சாலையா பள்ளி தாளாளர் சவிதா உதயகுமார், கிருஷ்ணா பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் கிருஷ்ணமூர்த்தி, எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். மைய தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஷ்குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம் மற்றும் அமைப்பாளர்கள் சண்முகம், கிருஷ்ணன், முஹம்மத் ஜாபர், சையத் ஜாபர் ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தினர். தன்னார்வலர்களான கணேஷ், குணசீலன், அம்பிகா உள்ளிட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
.gif)

