பாலக்கோடு, ஜூன் 05-
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு – உலக சுற்றுச்சூழல் தினத்தை (ஜூன் 5) முன்னிட்டு பாலக்கோடு பேரூராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஜூன் 6 ஆம் தேதி பேரூராட்சி தலைவர் திரு. பி.கே. முரளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு செயல் அலுவலர் திருமதி இந்துமதி முன்னிலை வகித்தார். பாலக்கோடு அண்ணாநகர் ரயில்வே கேட் முதல் இந்திரா காலனி ரேசன் கடை வரையிலும், தக்காளி மண்டி நெடுஞ்சாலைப் பகுதிகளில் சுமார் 500 மரக்கன்றுகள் பராமரிப்புடன் நட்டல் செய்யப்பட்டது. விழாவில், பேரூராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு "பூமியையும் அதன் இயற்கை வளங்களையும் பாதுகாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்", "நெகிழி பொருட்களை தவிர்ப்பேன்", "இயற்கை வளங்களை வீணாக்காமல் பராமரிப்பேன்" என உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பி.எல்.ஆர். ரவி மோகன், ரூஹித், அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். இந்த வகை நிகழ்வுகள் பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.