Type Here to Get Search Results !

பாலக்கோடு ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம் குழும இல்ல திருமண விழா தர்மபுரியில் விமர்சையாக நடைபெற்றது.


பாலக்கோடு, ஜூன் 5:

பாலக்கோட்டைச் சேர்ந்த பிரபல வணிக நிறுவனம் ஸ்ரீராம் சில்க்ஸ் மற்றும் கே.ஜி.எம் குழுமத்தின் சார்பில், இல்ல திருமண விழா தருமபுரி ஜோதி மஹாலில் நடைபெற்றது. இந்த விழாவில் பாமக மாவட்ட செயலாளர் மற்றும் தருமபுரி தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.பி. வெங்கடேஸ்வரன் கலந்து கொண்டு மணமக்கள் தமிழ்செல்வன் மற்றும் பவித்ராதேவி ஆகியோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.


இவ்விழாவில் பாமக மாநில துணைத் தலைவர் பாடி.செல்வம், முன்னாள் எம்.பி. செந்தில், அமமுக தலைமை நிலையச் செயலாளர் டி.கே.இராஜேந்திரன், மூகாம்பிகை கல்வி நிறுவனத் தலைவர் கே. கோவிந்தராஜி, பாமக மாநில துணைத் தலைவர் சாந்தமூர்த்தி, பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, அதிமுக மாணவரணி மாவட்டச் செயலாளர் முருகேசன் மற்றும் மங்கள கணபதி பைனான்ஸ் நிறுவனர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


விழாவில் அரசியல் தலைவர்கள், வணிகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள், நண்பர்கள், உறவினர்கள் என திரளானோர் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். வருகை தந்த அனைவரையும் மருத்துவர் பாலகிருஷ்ணன், மருத்துவர் மோகனபிரியா, கே.ஜி. மாதையன் மற்றும் மணமக்களின் குடும்பத்தினர் வரவேற்று நன்றி தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies