Type Here to Get Search Results !

பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்.


பாலக்கோடு‌, ஜூன் 12-

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வட்ட தலைவர்  நக்கீரன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர்  பெருமாள், மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட தலைவர் குமார், மார்க்சிஸ்ட் கட்சியின் வட்டசெயலாளர்  காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால், தமிழ்நாடு அரசு மாங்காய் கிலோ ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு  கொள்முதல் செய்ய வேண்டும்என்றும், தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட     மா விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், மா விவசாயிகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்ட செயலாளர்  முருகன், மாவட்ட துணை தலைவர் மல்லையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மா விவசாயிகளுக்கான கோரிக்கையை விளக்கி பேசினர். இறுதியில் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies