தருமபுரி, ஆடவை (ஆனி) 09-
விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வுகள் காணும் நோக்கில், தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (27 ஜூன் 2025) ஆடவை (ஆனி) 13, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இக்கூட்டம் காலை 11.00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கூடுதல் கட்டடம், கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தலைமையில் நடைபெறும்.
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், வேளாண்மை மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த குறைகளை நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க இந்த வாய்ப்பை பயனுள்ளதாக பயன்படுத்தலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.