Type Here to Get Search Results !

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றுவோருக்கு மாநில அரசு விருதுகள் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தருமபுரி, ஜூன் 19-

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வரும் 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில், தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு பின்வரும் வகையான மாநில விருதுகள் வழங்கப்படும்.


எண் விருது வகை விருது விவரம்
1 மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் 10 கிராம் எடையுள்ள பதக்கம், ரூ.50,000 ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்
2 சேவை புரிந்த சிறந்த மருத்துவர் 10 கிராம் எடையுள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ்
3 மிக அதிக வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம் 10 கிராம் எடையுள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ்
4 சிறந்த சமூக பணியாளர் 10 கிராம் எடையுள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ்
5 அதிகளவு கடன் வழங்கிய சிறந்த மத்திய கூட்டுறவு 10 கிராம் எடையுள்ள பதக்கம் மற்றும் சான்றிதழ்


மேற்கண்ட விருதுகளுக்காக தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 30.06.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும். வலைத்தளத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும்; மின்னஞ்சல் அல்லது கையெழுத்துப் பதிப்புகள் ஏற்கப்படமாட்டாது.


மேலும், விண்ணப்பத்தின் இரண்டு நகல்களை 30.06.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்குள், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். தகுதியும், சேவையையும் கொண்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு விருதுகளை பெற விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies