Type Here to Get Search Results !

கலைஞர் பிறந்த நாள் விழாவில் மாணவங்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்.


மாரண்டஹள்ளி, ஜூன் 04-

தர்மபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள சி.எம்.புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக இலக்கிய அணி சார்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை தலைமையிலாக, மாநில விவசாய அணி துணைச் செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, பாலக்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் அரியப்பன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஹரிபிரசாத், தலைமை ஆசிரியர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இந்நிகழ்ச்சியில் 220 மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா, பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும், கலைஞரின் அரசியல் வாழ்க்கை, இலக்கிய பணி மற்றும் கல்விக்கான பங்களிப்புகளைப் பற்றிய சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. நிகழ்ச்சியில் நிர்வாகிகள் முனுசாமி, துரை, குமார், ரமேஷ், பழனிசாமி, யசோதா, முத்தன், குண்டன், கிருஷ்ணன், திருமலைவாசன், சுரேஷ், ராகுல் ராஜபார்ட், ராஜா, பாபு, கோவிந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies