பாலக்கோடு பூவன்கொட்டாய் கிராமத்தில் வெப்பாளப்பட்டி மாரியம்மன் சிலை பிரதிஷ்டை – சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் ஆராதனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 2 மே, 2025

பாலக்கோடு பூவன்கொட்டாய் கிராமத்தில் வெப்பாளப்பட்டி மாரியம்மன் சிலை பிரதிஷ்டை – சிறப்பு பூஜையுடன் பக்தர்கள் ஆராதனை.


தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பூவன்கொட்டாய் கிராமத்தில் அமைந்துள்ள வெப்பாளப்பட்டி மாரியம்மன் கோயில், பாரம்பரியமும் பக்திப் பெருக்கமும் மிக்க கோயிலாக விளங்கி வருகிறது. 
பக்தர்களின் வசதிக்காக, புதியதாக கோயில் கட்டும் பணி ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கோயிலின் கருவறை பணிகள் தொடங்கப்பட உள்ளதால், தற்போதைய அம்மன் சிலை மேளதாள இசையுடன் கும்ப கலசத்தை பின்தொடர்ந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அருகிலுள்ள புதிய கட்டிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.


அதையடுத்து அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், பூக்களால் அலங்காரம், மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மனை கொலுவில் வைக்கும் புனித நிகழ்வும் நடைபெற்றது. இவ்விழாவில் ஊர் கவுண்டர்கள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். கோயில் நிர்வாகம் விரைவில் கட்டுமானப் பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என தெரிவித்துள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad