தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீகரிவரதராஜ வெங்கட்ரமணா சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் விழா ஆன்மிக உற்சாகத்துடன், பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்ட நிலையில் சிறப்பாக நடைபெற்றது.
மூன்று நாள்கள் கடந்த கொடியேற்ற நிகழ்வுடன் விழா தொடங்கப்பட்டது. பின்னர் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பஞ்ச சூக்த ஹோமம், துர்கா சகஸ்ரநாமம், மகா சாந்தி ஹோமம், மற்றும் வேத பாராயணம், நான்கு கால வேள்விகள் போன்ற ஆன்மிக நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
முக்கிய நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை, யாகசாலையில் நடைபெற்ற பூஜைகள் மற்றும் ஹோமங்களுக்குப் பிறகு, புனித தீர்த்தக் கலசங்கள் கோயிலின் உச்சியில் உள்ள கலசத்திற்குத் தூய நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, அந்த புனித நீர் பக்தர்களின் மீது தெளிக்கப் பட்டது. பின்னர் பெருமாளுக்கு அபிஷேகங்கள், விசேஷ அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீகரிவரதராஜ வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஊரின் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக