6 மாதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் இல்லை; குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள். - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 14 மே, 2025

6 மாதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் இல்லை; குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்.


பென்னாகரம் அருகே உள்ள குருகலையூரில் 6 மாதமாக மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு தண்ணீர் வராததால் மக்கள் அவதி – உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் உள்ள ஏரியூர் ஊராட்சி ஒன்றியம் சார்ந்த குருகலையூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள 3,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் வரவில்லை என்பது கிராம மக்களுக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. தண்ணீர் வசதி இல்லாததால் அப்பகுதி மக்கள் ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வீடுகளில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பலர் காச்சல், சளி, வயிற்று புண் உள்ளிட்ட நீரினால் ஏற்படும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


இந்த நிலைமையை கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தின் கீழ் தண்ணீர் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். பொதுமக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பற்றாக்குறை உடனடியாக சரிசெய்யப்பட்டால், சுகாதார சிக்கல்கள் தவிர்க்கப்பட்டு மக்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

Post Top Ad