பென்னாகரம் வட்டத்தில் அமைந்துள்ள மாங்கரை பஞ்சாயத்துக்குட்பட்ட நல்லாம்பட்டி கிராமத்தில் தமிழர் தற்காப்பு பயிற்சி மையம் மற்றும் தீயணைப்பு துறை இணைந்து தீபோலி மற்றும் தீர்த்தடுப்பு ஒத்திகை மிக சிறப்பாக நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தமிழர் தற்காப்புப் பயிற்சி பள்ளி நிறுவனர் சண்முகம் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சிக்கு போக்குவரத்து நிலைய அலுவலர் மு. ரவிக்குமார் தலைமை வகித்தார். அவருடன் சிறப்பு நிலைய அலுவலர் இரா. முரளி, சின்னப்பள்ளத்தூர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மா. பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீயணைப்பு நிலையப் பணியாளர்கள் ஊராட்சி பகுதியில் தீவிபத்துகள் மற்றும் தீர்த்தடுப்புகளை தடுக்கும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். முதலுதவி, தீ தடுப்பு முறைகள், அவசரநேர செயல் திட்டங்கள் பற்றியும் நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஊரின் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு விழிப்புணர்வை பெற்றனர். நிகழ்ச்சியுடன் இணைந்து, அரசு வழங்கிய நவீன சாதனங்களும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்திற்காக 75.65 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கிய அவசரகால மீட்பு வாகனங்கள், நீர் லாரிகள், உயர் அழுத்த நீர்தாங்கி வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், ஈப்புகள் போன்ற தீயணைப்பு ஊர்திகள் குறித்து பொதுமக்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்காக, மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு, மாவட்ட தீயணைப்பு அலுவலர் மற்றும் பென்னாகரம் தீயணைப்பு நிலையம் சார்பாக நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக