தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயன்பாட்டில் இருந்த வாகனம் பொதுஏலம் மூலம் விற்பனை. - தகடூர் குரல் செய்திகள்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 மே, 2025

தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயன்பாட்டில் இருந்த வாகனம் பொதுஏலம் மூலம் விற்பனை.


தருமபுரி, மே 09: 

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பயன்பாட்டில் இருந்த TN 29 G 0733 என்ற எண் கொண்ட Bolero LX (D) வகை வாகனம் கழிவுநீக்கம் செய்யப்பட்ட நிலையில், 20.05.2025 அன்று காலை 11.00 மணிக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அலுவலகத்தில் பொது ஏலம் மூலம் விற்பனைக்குக் காத்திருக்கிறது.


இந்த ஏலத்தில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள், அதே நாளில் காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை, ரூ.5000/- மதிப்புள்ள வங்கி வரைவினை “Personal Assistant (Development) to Collector, Dharmapuri” என்ற பெயருக்கு செலுத்தி பதிவு செய்து ஏலத்தில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட விவரங்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) திரு. து. வேடியப்பன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

Post Top Ad