Type Here to Get Search Results !

மாவட்ட ஆட்சியர் செய்தி

காவல் சார்பு ஆய்வாளர் தேர்விற்கான இலவச மாதிரி தேர்வுகள் – தருமபுரி மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு.


தருமபுரி, மே 09: 

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) நடத்தவிருக்கும் 1299 காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா மற்றும் ஆயுதப்படை) பணியிடங்களுக்கான தேர்வை முன்னிட்டு, தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


இந்த தேர்விற்கான விண்ணப்பங்கள் 10.05.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களுக்காக 13.05.2025 முதல் 15 இலவச மாதிரி தேர்வுகள் அட்டவணையிடப்பட்டு நடத்தப்பட உள்ளன. இவை தவிர, மாநில அளவிலான முழுமையான மாதிரி தேர்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்:

  1. 3000க்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட நூலகம்
  2. பயிலக வசதி
  3. இலவச Wi-Fi
  4. இலவச கணினி பயன்பாடு

 

உள்ளடங்கிய அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. பயிற்சி வகுப்புகளில் சேர விருப்பமுள்ளவர்கள் https://shorturl.at/5YNcY என்ற இணையதள இணைப்பில் தங்களை பதிவு செய்யலாம். மேலும் தகவலுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவகத்தை நேரில் அணுகலாம் அல்லது 04342–288890 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies